வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த காவலாளி கைது


வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த காவலாளி கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 10:24 PM IST (Updated: 20 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியை அருகே உள்ள விவசாய நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா வனப்பகுதியை அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சணாமூர்த்தி என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த மாங்கொட்டையை மாடு கடித்தது. இதில் அந்த பொருள் வெடித்து மாட்டின் தாடையில் படுகாயம் ஏற்பட்டது. அடைந்தது. மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டை மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்ததாக அதே பகுதியை சேர்ந்த மாங்காய் தோப்பில் காவலாளியாக பணிபுரியும் குப்பன் (வயது 42) என்பவரை நேற்று உமராபாத் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story