சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 10:28 PM IST (Updated: 20 Jun 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்ற வாலிபர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கோரக்கங்தாங்கள் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அதே பகுதியில் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த செல்வம் மகன் கிரண்குமார்(வயது 19) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள்  ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story