திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம்: கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி-கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு


திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம்: கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி-கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jun 2021 11:17 PM IST (Updated: 20 Jun 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்ததில் கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்றார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அரசநத்தம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது தந்தை இறந்து விட்டதால் தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான கல்லூரி மாணவர் சூர்யா(19) என்பவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமியுடன் அந்த வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சூர்யா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது வெளியே தெரிந்தால் குடும்பத்தினருக்கு கெட்ட பெயர் ஏற்படும் என நினைத்து சிறுமி கடந்த 18-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

வலைவீச்சு

இதை கண்ட குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம்மாள், விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் சூர்யா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story