சூளகிரியில் டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி


சூளகிரியில் டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 Jun 2021 11:28 PM IST (Updated: 20 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.

சூளகிரி:
கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி சூளகிரி மேம்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் மரக்கட்டைகள் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவர் சம்சுதீன் (வயது 55), கிளீனர் ஜோகித் (20) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். 
இதனிடையே அந்த வழியாக போச்சம்பள்ளி அருகே உள்ள கருப்பேரியை சேர்ந்த பூபாலன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மரக்கட்டைகள் சாலையில் கிடப்பதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பூபாலன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story