போலீசாரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்கள் கைது
பஞ்சப்பள்ளியில் போலீசாரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த 6 சிறுவர்கள் போலீசாரை இழிவுபடுத்தி தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். அந்த வீடியோக்களில் பேசியுள்ள சிறுவர்கள் நாங்கள் கலவரம் செய்தால் தமிழகம் தாங்காது, எங்களை அடக்குவதற்கு காவல்துறை பத்தாது என்றும், மற்றொரு வீடியோவில் 2 சிறுவர்கள் அரிவாளை கையில் வைத்து கொண்டு நடனமாடியபடி நாங்கள் சொல்வது தான் இங்கு சட்டம் என பேசியுள்ளனர். மூன்றாவது வீடியோவில் நாங்க மனசு வைத்தால் நீங்க இருக்கவே மாட்டீங்க என்ற வசனங்களை பேசி வாட்ஸ் அப், முகநூல் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விட்டது பஞ்சப்பள்ளியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதான சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் வழக்குப்பதிவு செய்து போலீசாரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட 6 சிறுவர்களையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story