வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்


வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:49 PM IST (Updated: 20 Jun 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர்வழித்தடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

குளித்தலை
கலெக்டர் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் வாரிகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், குளித்தலை பகுதியில் கோட்டைமேடு வாரி, பனையூர் வாரி, இனுங்கூர் வாரி, சிவாயம் வாரி, வளையப்பட்டி வாரி, நங்கவரம்வாரி ஆகிய நீர்வழித்தடங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
400 ஏக்கர் நிலங்கள்
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்கள் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், குளித்தலை பகுதியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டன். மேலும், மேற்கண்ட வடிகால்வாரிகளில் செடி கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் உள்ளதால் மழை காலங்களின் வெள்ள நீர் செல்ல இயலாத நிலையில் உள்ளது. 
மேற்கண்ட வடிகால் வாரிகளை தூர்வாருவதன் மூலம் வெள்ள நீர் தேங்கமால் எளிதாக வடிந்து அருகில் உள்ள பாசன நிலங்களில் பயிர் சேதம் ஏற்படமால் பாதுகாக்கப்படும். இதன் மூலம் 12 கிராமங்களைச்சேர்ந்த சுமார் 4,000 ஏக்கர் நிலங்கள் வெள்ளநீர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும். 
ஒருவாரத்திற்குள் முடிக்கப்படும்
மேற்கண்ட பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை பருவ மழைக்கு முன்பு முடிக்கவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்துப் பணிகளும் ஒரு வாரகாலத்திற்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) தவச்செல்வம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவிப்பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story