புதிதாக 70 பேருக்கு நோய் தொற்று சேலத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.
புதிதாக 70 பேருக்கு நோய் தொற்று சேலத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
Published on

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 79 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று புதிதாக 70 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 19 பேர், சங்ககிரியில் 7 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், ஓமலூர் மற்றும் வீரபாண்டியில் தலா 5 பேர், நங்கவள்ளியில் 4 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த117 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம், மாவட்டம் முழுவதும் 849 பேர் மட்டும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,577 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com