7 ஆண்டாக பணி முடியாமல் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு
7 ஆண்டாக பணி முடியாமல் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவில் அருகே தாலுகா அலுவலக கட்டிடமும், தாசில்தார் குடியிருப்பு வளாகமும் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.
இந்த பணி இறுதி கட்டத்தை எட்டும் போது சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டாக பணி முடிவடையாமல் உள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் சமீரன் கிணத்துக்கடவுக்கு வந்தார். பின்னர் அவர் பணி முடியாமல் உள்ள கட்டிடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
வருவாய்த்துறையிடம் இருந்த ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது பயிற்சி கலெக்டர் சரண்யா, தாசில்தார் சசிரேகா, பேரூராட்சி செயல் அதிகாரி நாகராஜன், மண்டல துணை தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் கேசவமூர்த்தி, கோவில் செயல் அலுவலர்கள் சரணவன், சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story