பணகுடியில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்


பணகுடியில்  தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:45 AM IST (Updated: 21 Jun 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பணகுடி:

பணகுடியில் தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நீண்ட வரிசை

நெல்லை மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

ஏற்பாடுகளை வட்டார அரசு மருத்துவர் கோலப்பன் தலைமையில் அரசு மருத்துவர் தேவ் மகிபன் மற்றும் மருத்துவ அலுவலா்கள் செய்து இருந்தனர்.

வீரவநல்லூர்

இதேபோல் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, வீரவநல்லூர் திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

வட்டார மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ், மருத்துவர்கள் லட்சுமி, மேரி சேவியர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் பெத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story