தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

x
தினத்தந்தி 21 Jun 2021 1:05 AM IST (Updated: 21 Jun 2021 1:05 AM IST)
கூடங்குளம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள கல்யாண மண்டபம் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). கட்டிட தொழிலாளி. அதே தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பேசிக் கொண்டு இருந்த போது, சக்திவேல் குறிக்கிட்டு சில கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இந்த சம்பவத்தில் சக்திவேல் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் (24), சரவணன் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





