இரும்பு தாது கடத்திய 20 லாரிகள் பறிமுதல்


இரும்பு தாது கடத்திய 20 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:22 AM IST (Updated: 21 Jun 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரியில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக இரும்பு தாது கடத்தி சென்ற 20 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பல்லாரி:பல்லாரியில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக இரும்பு தாது கடத்தி சென்ற 20 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இரும்பு தாதுக்கள்

பல்லாரி மாவட்டத்தில் இரும்பு தாதுக்கள் நிறைந்து உள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து அடிக்கடி சட்டவிரோதமாக இரும்பு தாதுக்கள் லாரிகளில் கடத்தி செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ததாக சிறைக்கு சென்று இருந்தார். இதையடுத்து இரும்பு தாதுக்கள் வெட்டி எடுப்பது சற்று குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுக்கும் சம்பவங்கள் பல்லாரியில் அதிகரித்து உள்ளது.

20 லாரிகள் பறிமுதல்

இந்த நிலையில் பல்லாரியில் இருந்து ஆந்திராவுக்கு 20 லாரிகளில் இரும்பு தாதுக்கள் கடத்தி செல்லப்படுவதாக பல்லாரி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 20 லாரிகள் வந்தது. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது அதில் இரும்பு தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இரும்பு தாதுக்களை பல்லாரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 20 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 20 லாரிகளின் டிரைவர்களையும், கிளீனர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story