டிரைவரை அரிவாளால் வெட்டிய 6 பேர் மீது வழக்கு


டிரைவரை அரிவாளால் வெட்டிய 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jun 2021 2:33 AM IST (Updated: 21 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் வெட்டிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குன்னம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் மினி லாரி டிரைவராக உள்ளார். இவருக்கும், இவரது உறவினரான திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் அசோக்(26) என்பவருக்கும் குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணன், அந்த லாரியை குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் பகுதியில் நிறுத்தி வேலையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் கொளக்காநத்தம் பகுதியில் தங்கியிருந்த சரவணனை, அசோக் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த சரவணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அசோக் உள்ளிட்ட 6 பேர் மீது மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
1 More update

Next Story