போலீசாருக்கு யோகா பயிற்சி
கம்பத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி நடந்தது.
கம்பம்:
உலக யோகா தினத்தை முன்னிட்டும், கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மனஅழுத்தம் குறையவும் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி, இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் சமூக இடைவெளியை கடை பிடித்தும், முககவசம் அணிந்தும் பங்கேற்றனர். தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனங்களை யோகா பயிற்சியாளர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் செய்து காண்பித்தனர். தினமும் காலையில் 10 நிமிடம் ஆசனங்கள் செய்தால் மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதில் கம்பம் தெற்கு, வடக்கு, கூடலூர் போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story