கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 Jun 2021 8:42 PM IST (Updated: 21 Jun 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கீழக்கரை, 
கீழக்கரை வடக்குத் தெரு முஹ்தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார மருத்துவர் ராசிக்தீன் தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் மவுலா முகைதீன் தலைமையில் செயலாளர் மைதீன் இபுராகிம், துணைத் தலைவர் ரபீக் முகமது, பொருளாளர் பசீர் அகமது, உறுப்பினர்கள் ரகுமான் பிரதர்ஸ் சாதிக்,  இக்பால், பள்ளியின் முதல்வர் சேகு ஜகுபான் பாதுஷா ஆகியோர் முன்னிலையில் 335 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.இதைப்போல் கீழக்கரை பி.எஸ்.எம் மருத்துவ மனையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அகமது பிலால் தலைமையில் பவுசூல் அமீன், மரைக்கா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமில் தவறாமல் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வட்டார மருத்துவர் ராசிக்தீன் கேட்டுக்கொண்டார்.

Next Story