அருவிகளில் வெள்ளப்பெருக்கு


அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 21 Jun 2021 3:27 PM GMT (Updated: 21 Jun 2021 3:27 PM GMT)

கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

தொடர்ந்து மாலை 3 மணிக்கு கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழைக்கு, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்ேசாழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பெய்த மழைக்கு நட்சத்திர ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. 

நேற்று கனமழை பெய்ததால் நட்சத்திர ஏரியில் இருந்து அதிக உபரி நீர் வெளியேறியது. அத்துடன் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மழையையொட்டி கொடைக்கானல் பகுதியில் வானவில் தோன்றியது. 

இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். 

மழையின் காரணமாக இரவு நேரத்தில் அதிக குளிர்ச்சியான சூழல் நிலவியது. 


Next Story