மாவட்டத்தில் இதுவரை 7,511 மனுக்கள்

மாவட்டத்தில் இதுவரை 7,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன
மாவட்டத்தில் இதுவரை 7,511 மனுக்கள்
Published on

புதுக்கோட்டை, ஜூன்.22-
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரப்பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்துறையின் கீழ் பொதுமக்களிடமிருந்து 7,511 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் முதற்கட்டமாக 589 மனுக்கள் தீர்வுகாணப்பட்டுள்ளன. ஏனைய மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மனு ஏற்பு, தள்ளுபடி மற்றும் அதற்கான காரணம் குறித்தும் தினமும் இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா? என்பதை கண்காணிக்க உயர் அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரப்பெற்ற மனுக்களின் மீது தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com