கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்-முதியவர் கைது
கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
ஓசூர் அருகே உள்ள மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரப்பா (வயது 72). இவர் தனது வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும், அதை கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் சந்திரப்பாவை கைது செய்து, ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story