வாலாஜா நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்


வாலாஜா நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2021 6:35 PM GMT (Updated: 2021-06-22T00:05:27+05:30)

வாலாஜா நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் 120-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் வாலாஜாபேட்டை நகராட்சியில் வேலைபார்க்கும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்க வில்லை. 22 மாதமாக சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி பணத்தை முறையாக செலுத்தவில்லை. தற்காலிக பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., வைப்பு நிதி முறையாக சேர்வதில்லை என்று கூறினர்.

Next Story