தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்ட ஏ.ஐ.சி.சி.டி.யூ. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தொழிற்பேட்டையில் உள்ள நுகர் பொருள் வாணிப கழகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 6 மாதங்கள் வழங்க வேண்டும். கொரோனா தொற்று பாதித்த தொழிலாளர்களின் சிகிச்சை செலவையும், பணி செய்ய முடியாத காலங்களுக்கு ஊதியமும் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்குவதை போல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் சுமை தூக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story