வேலூர் ஜெயிலில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது


வேலூர் ஜெயிலில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது
x
தினத்தந்தி 22 Jun 2021 12:43 AM IST (Updated: 22 Jun 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஜெயிலில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் ஜெயில், பெண்கள் தனிச்சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 820 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கைதிகளுக்கு பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி சிறை மருத்துவர் பிரகாஷ்அய்யப்பன் தலைமையில் போடப்பட்டு வருகிறது. நேற்று இறுதிநாள் முகாம் நடந்தது. 

ஜெயில் கண்காணிப்பாளர் ருக்மணிபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். ஜெயிலர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பிரகாஷ்அய்யப்பன், சதீஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். இதையடுத்து அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story