தாயின் 2 வது கணவர் போக்சோவில் கைது


தாயின் 2 வது கணவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 7:16 PM GMT (Updated: 2021-06-22T00:46:02+05:30)

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கட்டிட தொழிலாளி

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 32 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.  

இதையடுத்து அந்த பெண்ணை பிரகாஷ் திருச்செந்தூரில் வைத்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 10 வயது மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன.

சிறுமி பலாத்காரம் 

இந்த நிலையில் பிரகாஷ் தனது 2-வது மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளுடன் கடந்த பிப்ரவரி மாதம் கோவை வந்தார். பிறகு ஒண்டிப்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

பிரகாசை இரு பெண் குழந்தைகளும் அப்பா என்று அழைத்து வந்தன. ஆனால் பிரகாசோ 10 வயது பெண் குழந்தையிடம் தனது காம லீலையை காட்டி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

கொலை மிரட்டல் 

இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னையும், தங்கை மற்றும் அம்மாவையும் கொன்றுவிடுவதாக பிரகாஷ் மிரட்டியதாக தெரிகிறது.

 இதனால் பயந்துபோன சிறுமி இது குறித்து வெளியே சொல்லவில்லை.
இந்தநிலையில்  பிரகாஷ் தனது மனைவியை இறைச்சி வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பினார். 

அந்த வேளையில் 10 வயது சிறுமியை வீட்டில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று கதவை பூட்டிக்கொண்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. 

போக்சோவில் கைது 

தனது அக்காவை, பிரகாஷ் கழிவறைக்கு அழைத்து சென்றதை 8 வயது சிறுமி பார்த்து உள்ளார். கடைக்கு சென்று வீடுதிரும்பிய தனது தாயி டம் அவர் இது குறித்து கூறினார். 

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், தனது மூத்த மகளிடம் கேட்டபோது, அவர் பிரகாஷ் தன்னை பலாத்காரம் செய்ததையும், வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கூறி கதறி அழுதார். 

இது குறித்து கோவை கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி னார். 

அதில் சிறுமியை பலாத்காரம் செய்தது பிரகாஷ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாசை போலீசார் கைதுசெய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 


Next Story