கொரோனா தடுப்பூசி போட டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக வரிசையில் நின்ற பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கொரோனா தடுப்பூசி போட டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக வரிசையில் நின்ற பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தினத்தந்தி 21 Jun 2021 7:17 PM GMT (Updated: 2021-06-22T00:47:10+05:30)

கொரோனா தடுப்பூசி போட டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக வரிசையில் நின்ற பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 
கொரோனா தடுப்பூசி போட டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக வரிசையில் நின்ற பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர் தலையீடு மற்றும் அதிகாரிகள் தலையீடு காரணமாக தடுப்பூசி போடுவதில் பல்வேறு குளறுபடிகள் நிலவியது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். மேலும் தடுப்பூசிகளை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
பள்ளிகளில் முகாம்
இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களான பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட்டார். அதன்படி மக்கள் தொகை அடிப்படையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் ஆகியவற்றை கணக்கிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தடுப்பூசி முகாம் நேற்று முதல் தொடங்கியது.
நேற்று முன்தினம் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் டோக்கன் கொடுத்தனர். அதில் வாக்குச்சாவடி மையத்தின் பெயர், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தடுப்பூசி போடும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கினார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு வரிசையின் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டம் கூடுவது தவிர்ப்பு
அந்தந்த பள்ளிகளுக்கு முன்பு, டோக்கன் பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. நேற்று காலை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களான பள்ளிகளுக்கு சென்று வரிசையில் நின்று டோக்கனை அங்கிருந்த ஊழியரிடம் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினார்கள்.
இதனால் அதிகப்படியானவர்கள் ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கப்பட்டது. மேலும் வேண்டியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் தவிர்க்கப்பட்டது.
வாக்குவாதம்
இருப்பினும் தடுப்பூசி போடும் தகவல் தெரிந்து அந்தந்த பள்ளிகளுக்கு முன்பு அதிகாலை முதல் அதிகமானவர்கள் வரிசையில் நின்றார்கள். ஆனால் அங்கு வந்த ஊழியர்கள் ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்ததும் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து நிலைமையை எடுத்துக்கூறினார்கள். வாக்காளர் பட்டியல் அடிப்படையின் பேரில் தடுப்பூசிகள் போடப்படுகிறது என்று தெரிவித்ததை தொடர்ந்து ஒவ்வொரு பள்ளிகளின் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.

Next Story