பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாதிப்பு குறைகிறது
பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக ஒற்கை இலக்கை தாண்டவில்லை.
கொரோனா 2-வது அலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் இதுவரைக்கும் 10 ஆயிரத்து 342 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுவரைக்கும் 42 பேர் உயிரிழந்து உள்ளனர். வீடுகளில் 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொற்று அதிகம் பாதித்த 23 வீதிகள் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
61 பேருக்கு தொற்று
பொள்ளாச்சி நகரில் 2 பேர், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 6 பேர், ஆனை மலையில் 31 பேர், வடக்கு ஒன்றியத்தில் 7 பேர், தெற்கு ஒன்றியத்தில் 15 பேர் என மொத்தம் 61 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை தாலுகாவில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் 628 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் 683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story