உடுமலை வழியாக திருவனந்தபுரம்-மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் மீண்டும் தொடங்கியது.
உடுமலை வழியாக திருவனந்தபுரம்மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் மீண்டும் தொடங்கியது.
உடுமலை,
உடுமலை வழியாக திருவனந்தபுரம்-மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் மீண்டும் தொடங்கியது.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06343) இயக்கப்பட்டு வந்தது. அதேபோன்று எதிர்திசையில் மதுரையில் இருந்து உடுமலை, பாலக்காடு வழியாக திருவனந்தபுரத்திற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ( வண்டி எண்:06344) இயக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்ததைத்தொடர்ந்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளின்படி இந்த ரெயில் கடந்த மாதம் (மே) 3-ந்தேதி முதல்சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டுவந்தது. ஆனால் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் மிகக்குறைவாக இருந்ததால், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் (மே) 15-ந்தேதி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் தொடக்கம்
இந்த நிலையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் நேற்று முன்தினம் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது. அதேசமயம்இந்த ரெயில் இயக்க கால அட்டவணையில் மாற்றமில்லை. அதன்படி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக நேற்று காலை 6.30 மணிக்கு உடுமலைக்கு வந்தது.அதன் பிறகு உடுமலையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்று சேர்ந்தது.
இந்த ரெயில் தினசரி திருவனந்தபுரத்தில் இருந்து இரவு8.30மணிக்கு புறப்பட்டு இந்த வழித்தடத்தில் உடுமலை வழியாக மறு நாள் காலை 10.10மணிக்கு மதுரைக்கு சென்று சேரும்.
மதுரையில் இருந்து தினசரி மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.03 மணிக்கு உடுமலைக்கு வரும் இந்த ரெயில் உடுமலையில் இருந்து புறப்பட்டு பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு சென்று சேரும். சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
பயணிகள் கூட்டம்
கடந்த மாதம் இந்த வழித்தடத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்த நாட்களில் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் மிகக்குறைவாக இருந்தது. அதனால் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இந்த ரெயில் இயக்கப்பட்டதில் முதல் நாளான நேற்று இந்த ரெயிலில் மதுரை வழித்தடத்தில் பயணம் செய்வதற்கு உடுமலை ரெயில் நிலையத்தில்30 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
இதுதவிர ஆன் லைன் மூலமாகவும் சிலர் முன்பதிவு செய்திருந்தனர். அந்த பயணிகள் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயிலில் புறப்பட்டு சென்றனர். முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கம் இல்லாத நிலையில் ரெயிலுக்கு பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story