உடுமலை பகுதியில் ரவுடித்தனம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


உடுமலை பகுதியில் ரவுடித்தனம் செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்  புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு  தெரிவித்தார்.
x
தினத்தந்தி 21 Jun 2021 7:23 PM GMT (Updated: 2021-06-22T00:53:53+05:30)

உடுமலை பகுதியில் ரவுடித்தனம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

உடுமலை
உடுமலை பகுதியில் ரவுடித்தனம் செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றப்பிரிவில் 2 தனிப்படைகள் அமைக்கப்படும் என்றும், உடுமலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் தெரிவித்தார்.
புதியதுணை போலீஸ் சூப்பிரண்டு
உடுமலை போலீஸ் உட்கோட்டத்தில் (சப்-டிவிசன்) துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிவந்த என்.ரவிக்குமார் மதுரைமாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து,  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஆர்.தேன்மொழிவேல், உடுமலை துணைபோலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடுமலை உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்மீதும், ரவுடித்தனம் செய்கிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறவர்களை காத்திருக்கவைக்கக்கூடாது என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்கும் வகையில் போலீஸ்துறை செயல்படும்.
குற்றப்பிரிவில் 2 தனிப்படை
திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்துபணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு போலீசார் பணிகளை மேற்கொள்வார்கள். அதையும் மீறி பெரிய திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்தால், அதில் துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்காக குற்றப்பிரிவில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளது.இந்த தனிப்படையில், குற்றவாளிகளை பிடிப்பதற்கான திறமையுடன், இந்த பணியில் ஆர்வம் உள்ளபோலீசார் இடம்பெறும் வகையில் தனிப்படை அமைக்கப்படும். இந்த 2 தனிப்படைகளும் எனது நேரடி மேற்பார்வையில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story