தர்மபுரி நகரில் ஒருங்கிணைந்த தூய்மை பணி

தர்மபுரி நகரில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடந்தது.
தர்மபுரி நகரில் ஒருங்கிணைந்த தூய்மை பணி
Published on

தர்மபுரி:

தர்மபுரி நகராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த தீவிர தூய்மை பணி 24-வது வார்டு சத்திரம் மேல் தெருவில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமையொட்டி அந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டது. சாக்கடை கால்வாய்களில் உள்ள அடைப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் சாக்கடை கால்வாயின் மீது உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. முகாமில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமண சரன், சீனிவாசலு மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com