மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 1:14 AM IST (Updated: 22 Jun 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி சில இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின்பேரில் சிவகாசி கிழக்கு, மாரனேரி போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அய்யப்பன் (வயது 31), ஞானசேகரன் (45), அசோகன் (43), ஜோதிராஜ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்குள்ள மரத்தடியில் காசு வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (53), பெரியசாமி (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1030-யை பறிமுதல் செய்தனர்.

Next Story