‘இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன்’-திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேச்சு


‘இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன்’-திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேச்சு
x
தினத்தந்தி 21 Jun 2021 8:08 PM GMT (Updated: 2021-06-22T01:38:36+05:30)

இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேசினார்.

மானாமதுரை,

இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேசினார்.

சசிகலா பேச்சு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகி சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா கடந்த சில தினங்களாக அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் செல்போனில் பேசி வருகிறார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று திருப்புவனம் அருகே பூவந்தியைச் சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சரவணனிடம் சசிகலா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மீண்டும் அரசியலுக்கு வருவேன்

 என்னால் கெடுதல் எதுவும் கட்சியில் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் அரசியலில் இருந்து ஒதுங்கினேன். மேலும் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் அது நடக்கவில்லை. இனியும் அரசியலில் இருந்து பின்வாங்கமாட்டேன். கண்டிப்பாக மீண்டும் அரசியலுக்கு வருவேன். தற்போது கட்சி தனி நபர்களுக்காகவே செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
 ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மானாமதுரையை சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் சண்முகப்பிரியாவிடம் செல்போனில் பேசிய நிலையில் தற்போது 2-வது முறையாக அ.தி.மு.க. நிர்வாகியிடம் சசிகலா செல்போனில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story