கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 21 Jun 2021 8:59 PM GMT (Updated: 2021-06-22T02:29:13+05:30)

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 67, 60 வயதுடைய முதியவர்கள் 2 பேரும், 66 வயதுடைய மூதாட்டி ஒருவரும் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 55 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 588 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 913 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி 2,849 பேருக்கு போடப்பட்டுள்ளது. அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தினை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

Next Story