மது வாங்கித்தர மறுத்த வாலிபருக்கு சோடா பாட்டில் குத்து


மது வாங்கித்தர மறுத்த வாலிபருக்கு சோடா பாட்டில் குத்து
x
தினத்தந்தி 21 Jun 2021 8:59 PM GMT (Updated: 21 Jun 2021 8:59 PM GMT)

உடையார்பாளையத்தில் மது வாங்கித்தர மறுத்த வாலிபரை சோடா பாட்டிலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளையம்:

சோடா பாட்டிலால் குத்தினார்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைகலநாட்டார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ரஞ்சித்(வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். தற்போது அவர், கொரோனா விடுமுறையால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித், அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார். அப்போது 17 வயதுடைய ஒரு சிறுவன், ரஞ்சித்திடம் மது வாங்கி தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் மது வாங்கி தர ரஞ்சித் மறுத்ததால், அருகில் கிடந்த சோடா பாட்டிலை எடுத்த ரஞ்சித்தை வினோத் குத்தியுள்ளார்.
கைது
இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சிறுவன், லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்த வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story