அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:00 PM GMT (Updated: 2021-06-22T02:30:27+05:30)

அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கை.களத்தூர் மின் தொடரில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், சிறுநிலா, நூத்தப்பூர், மாவிலிங்கை, கை.களத்தூர், பில்லங்குளம், காரியானூர், வெள்ளுவாடி ஆகிய ஊர்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் அ.மேட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அ.மேட்டூர், கவுண்டபாளையம், விஜயபுரம், தொண்டமாந்துறை ஆகிய ஊர்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
நாளை(புதன்கிழமை) அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய ஊர்களிலும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) வேப்படி, பாலக்காடு பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story