கோத்தகிரி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது


கோத்தகிரி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 6:31 AM IST (Updated: 22 Jun 2021 6:32 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதனால் சாராயம் காய்ச்சுவதை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் சேட்டுப் பேட்டை கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 27) என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுதொடர்பாக சரத்குமாரை கைது செய்தனர். 

Next Story