பெண் உள்பட 2 பேர் கைது


பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 10:10 AM IST (Updated: 22 Jun 2021 10:10 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

சேலம்
வீராணம் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை நடப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்த குமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது தலைமையில் வீராணம் போலீசார் வளையகாரனூர் பகுதியில் வீடு, வீடாக திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 40) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 50 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
அதே போன்று அதே பகுதியை சேர்ந்த கவிதா (42).அவரது வீட்டில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றையும் அழித்தனர். கவிதாவை போலீசார் கைது செய்தனர். 

Related Tags :
Next Story