மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதற்காக காதலியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் படுகொலைபெண்ணின் பெற்றோர் உள்பட 4 பேர் கைது + "||" + In order to get married The murder of a young man who took his girlfriend on a motorcycle Four people were arrested including the girl parents

திருமணம் செய்வதற்காக காதலியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் படுகொலைபெண்ணின் பெற்றோர் உள்பட 4 பேர் கைது

திருமணம் செய்வதற்காக காதலியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் படுகொலைபெண்ணின் பெற்றோர் உள்பட 4 பேர் கைது
திருமணம் செய்வதற்காக காதலியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா (வயது 21). கேட்டரிங் படித்து உள்ளார். 
நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் பரமேஸ்வரி (20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 
பாரதிராஜாவும், பரமேஸ்வரியும் நத்தத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள். 
மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்
இவர்கள் காதலிப்பது பரமேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பரமேஸ்வரியை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். 
இதுகுறித்து பரமேஸ்வரி தனது காதலன் பாரதிராஜாவிடம் தெரிவித்தார். இதையடுத்து பாரதிராஜா மோட்டார்சைக்கிளில் மூங்கில்பட்டி முல்லை நகருக்கு ேநற்று முன்தினம் இரவு வந்தார். 
பின்னர் அவர் பரமேஸ்வரியை செல்போனில் தொடர்புகொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், உடனே புறப்பட்டு வரும்படியும் கூறினார். அதன்பேரில் பரமேஸ்வரி அங்கு புறப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். 
கல்லால் தாக்கி கொலை
இதனிடையே பரமேஸ்வரி வீட்டில் இருந்து புறப்பட்டு காதலனுடன் சென்றது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அதையொட்டி பரமேஸ்வரியின் தந்தை ராசு, தாயார் அழகுநாச்சி, அண்ணன்கள் மலைச்சாமி (34), பாலகுமார் (28) ஆகியோர் மோட்டார்சைக்கிள்களில் வேகமாக சென்று பாரதிராஜாவை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி உள்பட 4 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து காதலி கண் முன்னே துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பரமேஸ்வரி துக்கம் தாங்காமல் கதறினார். பின்னர் அவர்கள் பரமேஸ்வரியை தங்களுடன் அழைத்து சென்று விட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பாரதிராஜா உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பரமேஸ்வரியின் பெற்றோர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நத்தம்-திண்டுக்கல் சாலையில் சேர்வீடு விலக்கு அருகே காரை வழிமறித்து ராசு, அழகுநாச்சி, மலைச்சாமி, பாலகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரியை அவரது உறவினர் வீட்டில் போலீசார் தங்க வைத்து உள்ளனர். 
பலத்த போலீஸ் பாதுகாப்பு
காதலி கண் முன்னே காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தொடர்விளைவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மூங்கில்பட்டி, முல்லை நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.