திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஜமாபந்தி
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. தொடர்ந்து 25-ந் தேதி வரை நடக்கிறது. தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கிராமிய இசை கலைஞர் 60 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்களை அவர் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இணையவழியாக மனுக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் கொரோனா தொற்றின் காரணமாக நேரடியாக பொதுமக்கள் ஜமாபந்திக்கு வர இயலாத காரணத்தினால் இணையவழி மூலமாக மனுக்கள் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதன் மூலம் பொதுமக்களிடம் வீட்டு மனை பட்டா, பெயர் மாற்றம், குடும்ப அட்டை, அரசு உதவி தொகை, பொது பிரச்சனைகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணப்படும். ஏற்கனவே திருச்செந்தூர் தாலுகாவில் இணைய வழி மூலம் 62 மனுக்கள் வரப்பட்டிருக்கின்றது. 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்படி இணைய வழியில் பெறப்பட்ட மனுக்களின் மீதும் தீர்வு காணப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ, தாசில்தார் முருகேசன், சமூகநல திட்ட தாசில்தார் ராமச்சந்திரன், துணை தாசில்தார்கள் பாலசுந்தரம், கோபால், வட்டார வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
Related Tags :
Next Story