ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி, ஆன்லைன் வழியில் விண்ணப்பம் பெறும் வழிமுறையை தொடங்கி வைத்தார். அத்துடன், மாணவி ஒருவருக்கு விண்ணப்பம் மற்றும் வழிகாட்டி தொகுப்பை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் வி.பி.ஆர். சிவக்குமார், கணினி மைய இயக்குனர் கஸ்பார் ராஜ், பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தற்போது 4 ஆண்டு பி.எஸ்சி. (வேளாண்மை), 3 ஆண்டு கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகள், 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு, பி.டெக். சிவில் என்ஜினீயரிங், 3 ஆண்டு துளிர் கல்வி பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story