சித்த மருத்துவம் மூலம் 621 பேர் குணமடைந்தனர்
சித்த மருத்துவம் மூலம் 621 பேர் குணமடைந்தனர்.
கோவை,
கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள சித்தமருத்துவ சிகிச்சை பிரிவில் இதுவரை 286 ஆண்கள், 163 பெண்கள், 10 குழந்தை கள் என மொத்தம் 459 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 255 ஆண்கள், 146 பெண்கள், 9 குழந்தைகள் என மொத்தம் 410 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 30 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனிவாச கல்யாண மண்டபத்தில் சித்தமருத்துவ சிகிச்சைப் பிரிவில் 137 ஆண்கள், 94 பெண்கள், 9 குழந்தைகள் என மொத்தம் 240 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இதுவரை 118 ஆண்கள், 84 பெண்கள், 9குழந்தைகள் என மொத்தம் 211 பேர் முழுயாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 7 பேர் சிகி ச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் 2-வது அலையின் போது மொத்தம் 621 பேர் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story