பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி, ஜூன்.23-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வேலன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட பொது செயலாளர் மணி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். புதிய போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
காலஅவகாசம்
கொரோனா காலங்களில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் தலா ரூ.7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும். அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் பெற்ற கடன்களை வசூலிக்க 6 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் தர்மபுரி 4 ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story