பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,ஜூன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. நகர் தலைவர் மாரிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்க மாநில பொதுச் செயலாளர் சிவாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கும் போது பொதுமக்களை பாதிக்கக் கூடிய, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்விற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், கொரோனா கால கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து கொண்டே போவது கண்டிக்கத்தக்கது என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆட்டோவை கயிறுகட்டி இழுத்துக்கொண்டு சென்றபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story