ஓசூர் அருகே வாகனம் மோதி புள்ளிமான் செத்தது


ஓசூர் அருகே  வாகனம் மோதி புள்ளிமான் செத்தது
x
தினத்தந்தி 22 Jun 2021 11:15 PM IST (Updated: 22 Jun 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே வாகனம் மோதி புள்ளிமான் செத்தது.

ஓசூர்:
ஓசூர் அருகே பேரண்டபள்ளி வனப்பகுதியில் இருந்து 4 வயதான ஆண் புள்ளிமான் ஒன்று, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம், மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 
இதில் அந்த புள்ளிமான், பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மானுக்கு தண்ணீர் ஊற்றி காப்பாற்ற முயன்றனர். ஆனால் மான் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று மானின் உடலை மீட்டனர். பின்னர், ஓசூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பிறகு, மானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story