ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 11:18 PM IST (Updated: 22 Jun 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:
ஓசூரில் ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல ரவுடி
ஓசூர் அருகே நல்லூர் ராஜாஜி லேஅவுட்டை சேர்ந்தவர் அபி என்ற அபிலாஷ் (வயது 29), பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன, மேலும், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு, அவர் பேடரப்பள்ளி பகுதியில் நடந்து சென்றபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. 
இந்த கொலை தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணைநடத்தினார்கள். அதில் பைனான்ஸ் தொழில் பிரச்சினையில் அபிலேசை அவரது நண்பர் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த சபரிசிங் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சபரிசிங், முரளி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 3 பேர் கைது
இந்த கொலை வழக்கில் அத்திப்பள்ளியை சேர்ந்த நவீன் (31), பேடரப்பள்ளி மீனாட்சி நகரை சேர்ந்த கார்த்திக் (39), பெங்களூருவை சேர்ந்த ஹரி (25) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 5 பேரும் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டன். பின்னர் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story