பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:50 PM IST (Updated: 22 Jun 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ தொழிலாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி,ஜூன்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்று, இன்சூரன்ஸ், லைசன்ஸ் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கு டிசம்பர் 31-ந்தேதி வரை கால அவகாசம் தர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி ெரயில் நிலையம், பெரியார் சிலை, செக்காலை ஆகிய இடங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாநிலக்குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் பாலு மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story