கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்


கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:54 PM IST (Updated: 22 Jun 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் 7மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில்புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ஜெயமாதா நகர் பகுதியை சேர்ந்தவர் திலீபன். பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காவியா (வயது21). இவர்களுக்கு சன்சிகா என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. காவியா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். திலீபன் குடித்துவிட்டு மனைவி காவியாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த திலீபன், மனைவி காவியாவுடன் தகராறு செய்துள்ளார். இரவு சுமார் 10.30 மணி அளவில் திலீபன் தனது மகளை பக்கத்து வீட்டில்  உள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் செல்போனை வாங்கி தனது உறவினர் யாருக்கோ பேசிஉள்ளார். 

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது அவர்கள் காவிய குறித்து கேட்டதற்கு அவள் தூக்குப்போட்டு கொண்டாள் என கூறி அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய காவியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திலீபனை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போலீஸ் விசாரணை

இதுகுறித்து காவியாவின் தந்தை ராஜகுமார் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், திலீபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story