கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 231 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 67,617 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 1,393 பேர் உள்ளனர். 471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 65,362 ஆகும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகி ச்சை பெற்ற 62 வயது மூதாட்டி மற்றும் 79, 64, 61 வயதுடைய 3 ஆண்கள் என மொத்தம் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 862 ஆக உயர்ந்தது. திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன. நேற்றைய தினம் ஆக்சிஜன் படுக்கை 1,282, சாதாரண படுக்கைகள் 1,268, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 255 என மொத்தம் 2,805 படுக்கைகள் காலியாக உள்ளன.
Related Tags :
Next Story