நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:39 AM IST (Updated: 23 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஐம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
 நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிபட்டி, குரங்காத்துபள்ளம், காக்காவேரி, அரியாக்கவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவல்களை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநயகம், ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Next Story