திருமணம் செய்வதாக கூறி சிறுமியை ஏமாற்றிய பிரியாணி கடைக்காரர் போக்சோவில் கைது
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை ஏமாற்றிய பிரியாணி கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜீயபுரம்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 முடித்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் மணிகண்டன்(வயது 27) 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரிவசூல் செய்ய அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது முதல் சிறுமி குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருதி, அந்த சிறுமிக்கு அடிக்கடி பிரியாணி கொடுத்து பழகி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று பலமுறை சந்தோஷமாக இருந்துள்ளார். இந்தநிலையில் சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி சைல்டு லைன் மூலம் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடா்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story