விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 7:16 PM GMT (Updated: 2021-06-23T00:46:30+05:30)

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கூலி உயர்வு 
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் மற்றும் அய்யனாபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தப்படி இந்த வருடத்திற்கான கூலி உயர்வை பல விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ஒப்பந்தப்படி 3-ம் ஆண்டு கூலி உயர்வை வழங்க கோரி அனைத்து விசைத்தறி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
சமுசிகாபுரம் விலக்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விசைத்தறி தொழிற் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களுக்கு 3-ம் ஆண்டுக்கான கூலி உயர்வை  காலம் தாழ்த்தும் உரிமையாளர்களை கண்டித்தும், இந்த விஷயத்தில் அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு தொழிலாளர்களுக்கான கூலி உயர்வை பெற்றுத் தர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். 

Next Story