வெள்ளகோவிலில் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.2லட்சம் போலி பீடி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


வெள்ளகோவிலில் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.2லட்சம் போலி பீடி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
x
தினத்தந்தி 23 Jun 2021 1:07 AM IST (Updated: 23 Jun 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.2 லட்சம் போலி பீடி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.2½ லட்சம் போலி பீடி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலி பீடி
வெள்ளகோவில் சேனாபதிபாளையம்  அண்ணாநகர் பகுதியில் ஒரு குடோனில் போலி பீடி மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மசாலா புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் மற்றும்  போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் (பொறுப்பு) மற்றும் வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், ஏட்டு சாந்தகுமார், மணிமுத்து, சதீஷ் கொண்ட போலீஸ் குழு அண்ணா நகருக்கு சென்று குடோனில் சோதனையிட்டனர்.
அப்போது அந்த குடோனில் 10 நம்பர் போலி பீடி 200 பண்டல், மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட விஷத்தன்மையுள்ள 3 வகையான, 23 மூட்டை புகையிலை இருப்பது தெரியவந்தது. 
பறிமுதல்
இவறின் மதிப்பு ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து500 ஆகும். இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோனை வாடகைக்கு எடுத்து போலி பீடி, தடை செய்யப்பட்ட மசாலா புகையிலை பொருட்களை விற்றது யார்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் பெரியசாமி நகரை சேர்ந்த தங்கவேல் மகன் ஹரி (வயது 22) என தெரியவந்தது.  இதையடுத்து வெள்ளகோவில் போலீசார் ஹரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். 
பல்லடம்
இதே போல் பல்லடம் அருகே  ராசா கவுண்டம்பாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் மற்றும்  போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
 அப்போது அதே பகுதியில்  முருகன் (54) என்பவரது மளிகை கடையில் சோதனையிட்டனர்.சோதனையின் போது அங்கு  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 294 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.
324 கிலோ பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் சாராயம், கள், மது பாட்டில்கள் விற்பனை ஈடுபட்டவர்கள் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 977 மதுபாட்டில்கள், 13 லிட்டர் கள், சாராயம் 3 லிட்டர், ஊறல் 40 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது செய்யப்பட்டு ரூ.1,190 கைப்பற்றப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 324 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

Next Story