இலவச உழவு பணியை கலெக்டர் ஆய்வு


இலவச உழவு பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2021 1:16 AM IST (Updated: 23 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே நடைபெற்று வரும் இலவச உழவு பணியை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே நடைபெற்று வரும் இலவச உழவு பணியை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார். 
கலெக்டர் ஆய்வு 
 காரியாபட்டி தாலுகா பிசிண்டி கிராமத்தில் வேளாண்மைதுறை மற்றும் தனியார் நிறுவனம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி இலவசமாக மேற்கொண்டு வரும் உழவு பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று காலத்தில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு டாபே நிறுவனம் விருதுநகர் மாவட்டத்தில்  6,000 ஏக்கர் பரப்பளவில் 2,314 விவசாயிகளுக்கு இலவசமாக வேளாண் எந்திரங்கள் கொண்டு உழவு பணி மேற்கொண்டது. 
உழவுப்பணி 
இந்தவருடத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை 1494 ஏக்கர் பரப்பில் 819 விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தில் இலவசமாக உழவுப்பணி மேற்கொண்டுள்ளது. 
தொடர்ந்து இந்த பணி மாவட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு நடைபெற்று வருகிறது. 
தமிழ்நாடு உழவன் செயலி அல்லது ஜே.பார்ம் செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 18004200100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார். 
செயல்விளக்கம் 
ஆய்வின் போது அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், வேளாண்மை துணை இயக்குனர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர நாராயணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) சங்கர்ராஜ், தாசில்தார் தனக்குமார், டாபே நிறுவன கள அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 
 டாபே நிறுவனம் இந்த வருடம் உழவு பணிகளை மேற்கொள்ள சிறப்பாக ஆழமாக உழும் கலப்பைகள் கொண்ட டிராக்டர்களை பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, டிராக்டர் மீது அமர்ந்து ஆழ உழவு மேற்ெகாள்வது குறித்து கேட்டறிந்தார். அப்போது டிராக்டர் மூலம் ஆழ உழவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

Next Story