ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2021 7:48 PM GMT (Updated: 2021-06-23T01:18:51+05:30)

மங்களமேடு அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மங்களமேடு:

பூட்டு உடைந்து கிடந்தது
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள தி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 62). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக சேத்தியாத்தோப்பு வரை சென்றுள்ளார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைந்து கிடந்தது.
வெள்ளி குத்துவிளக்குகள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பூஜை அறையில் இருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளி சொம்பு ஒன்று காணாமல் போயிருந்தது. 
இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story